September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஸ்வாசம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட். சோகத்தில் மூழ்கிய தல ரசிகர்கள்

தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து தற்பொழுது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தினமும் ஒரு செய்தி விசுவாசம் படத்தை பற்றி வந்துகொண்டே இருக்கிறது, இயக்குனர் சிவா விசுவாசம் படத்திற்கு முன் வீரம்,வேதாளம், விவேகம் என மூன்று படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விவேகம் படத்திற்கு பிறகு சிவா எந்த ஒரு பேட்டியும் கொடுக்காமல் ரகசியம் காத்து வந்தார். தற்பொழுது தம்பி ராமையா மகன் நடித்த மணியார் குடும்பம் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார் இயக்குனர் சிவா. அங்கு அவர் விசுவாசம் படத்தை பற்றிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது :

விசுவாசம் படம் இதுவரை 40% வரை படத்தின் படபிடிப்பு முடிந்துவிட்டதாகவும் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முயற்சித்து வருவதாகவும் அதனால் மிக வேகமாக படபிடிப்பை நடந்துவருவதாகவும் கூறியுள்ளாதாக கூறப்படுகிறது. இதனால் தல ரசிகர்கள் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை என சோகத்தில் இருக்கிறார்கள். தல தீபாவளி கொண்டாட நினைத்த தல ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news