September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

வெற்றிகரமாக ஆரம்பமாகும் விஸ்வாசம் படபிடிப்பு – லேட்டஸ்ட் அப்டேட்

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத்.

இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தில் ரோபோ சங்க, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம் திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால், கடந்த 1 ½ மாதம் சினிமா ஸ்ட்ரைக்கால் அனைத்து படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஸ்வாசம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் படபிடிப்பு வரும் மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news