விஸ்வாசம் – விமர்சனம்

விஸ்வாசம் – தூக்குதுரையின் பாசம். தல அஜித்குமார் தேனி மாவட்டத்தில் முக்கியபுள்ளி. அங்கு மெடிக்கல் கேம்ப் வைப்பதற்காக வரும் நயந்தாரா அவர் மீது காதல் கொண்டு திருமணமும் செய்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு அஜித்குமாரின் எதிரிகளால் குழந்தைக்கு ஆபத்து இருக்கிறது என நினைத்து நயந்தாரா கணவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் பாம்பே சென்றுவிடுகிறார். 10 வருடங்களுக்கு பிறகு நயந்தாரா மனது மாறியிருக்கும் என நினைத்து அவரை கூட்டிவர பாம்பே செல்கிறார் அஜித்.

அங்கு சென்ற பிறகுதான் தன் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அறிகிறார். அந்த ஆபத்தில் இருந்து தன் குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தல அஜித் பாசமான அப்பா, கணவன் வேடங்களில் மிரட்டுகிறார். முதல் பாதியில் அவர் செய்யும் நகைச்சுவை அற்புதம். மாஸான கேரக்டரை தன் தலயிடம் இருந்து எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு, ஒரு ஜாலியான கேரக்டார வலம் வரும் அஜித்குமாரின் கதாபாத்திரம் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறதா என்பதில் மட்டும் ஒரு ஐயம் இருக்கிறது.

நாயகி நயந்தாரா. அஜிதிகுமாரின் மனைவியாக, ஒரு பொறுப்புள்ள அம்மாவாக அழகாக வந்து செல்கிறார். மகளாக வரும் அனிகா, தன் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். படத்தில் ரோபோ சங்கர், தம்பிராமையா படம் முழுவதும் வந்தாலும் காமெடி சில இடங்களில் ஒர்கவுட் ஆகவில்லை. யோகிபாபு சிறிது நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். விவேக் மற்றும் கோவை சரளா படத்திற்கு தேவையா என்ற கேள்வி இருக்கிறது.

வில்லன் ஜெகபதி பாபு, நம்பர் 1 இடத்தை தக்க வைக்கும் எண்ணத்திலும், அதற்காக தன் மகளையே வெறுக்கும் சீன்களிலும் நம்பும்படி இருக்கிறார். அஜித்துடனான அவரது சீன்கள் ரசிகர்களுக்கான மாஸ்.

இயக்குநர் சிறுத்தை சிவா. அஜித்துடன் 4-வது படம். அஜித் ரசிகர்களை தாண்டி இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படி இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்து ஒரு முழு family emotional கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதற்காக கண்டிப்பாக அவரை பாராட்ட வேண்டும். கதை நாம் பார்த்து சலித்த கதைதான் என்றாலும், அதில் அஜித்தை பார்க்கும் பொழுது புதியதாக இருக்கிறது.

கேமராமேன் வெற்றியின் கைவண்ணத்தில் தேனி மாவட்டம் அழகாக நம் கண்முன்னே வந்து செல்கிறது. இமானின் இசை படத்திற்கு இன்னொரு பக்கபலம் என்று கண்டிப்பாக சொல்ல வேண்டும்.

படத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் படி திரைக்கதை இல்லை என்றாலும் தெரிந்த கதையை நம் மனதில் ஆழமாக நிற்கும் படி சொல்லியிருப்பதற்கு படக்குழுவினரை பாராட்ட வேண்டும். மொத்ததில் விஸ்வாசம் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தூக்குதுரையின் மெஸேஜ்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news