September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

“விஸ்வாசம்” பர்ஸ்ட் லுக் வெளியானது – ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழையில் இயக்குனர் சிவா

சென்னை: சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் பர்ஸ் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று முன்பே தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து, அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த விஸ்வாசம் படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று அதிகாலை 3.40 மணிக்கு டிவிட்டரில் இயக்குனர் சிவா வெளியிட்டார்.

அதில் தல அஜித்குமார் இரட்டை வேடங்களில், வயதான சால்ட் & பெப்பர் லுக்கிலும், இளைமையான தோற்றம் என இரண்டு கதாபார்த்திரத்தில் நடிப்பது போல தெரிகிறது. மேலும்,  அந்த போஸ்டரில் ஒரு பகுதியில் நரகமயமான பின்புலமும் மற்றொன்று கிராம பாங்கான தோற்றத்திலும் காட்டியிருக்கிறார்கள். எனவே, அஜித் ரசிகளுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

முதல் லுக் போஸ்டர் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே லக்ஸ்களை குவித்து, ஷேர்களை குவித்து இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.  இதையடுத்து, நடிகர் அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட படக்குழுவினருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படம் வரும் 2019 பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news