September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை – விவரம் உள்ளே

சென்னை: அஜித் தற்போது விஸ்வாசம் படத்தின் சூட்டிங்கில் பிசியாக பணியாற்றி வருகிறார். இதன் படபிடிப்பு ஹைதிராபாத்தில் நடந்து வருகிறது. படம் பற்றிய தகவல்கள் அவ்வபோது லேசாக கசிந்து வருகிறது. மேலும், அஜித் சூட்டிங் செல்லும் புகைப்படங்களையும் அவரது ரசிகர்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், படம் தொடங்கப்பட்டு பெரிதாக எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவராத நிலையில், இம்மாத இறுதியில் படத்தின் “முதல் லுக்” வெளியாகும் என்ற தெரியவந்துள்ளது. இதுகுறித்து,  சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது “படம் கடந்த பிப்ரவி மாதம் தொடங்கப்பட்டது, வரும் தீபாளவிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டே பணிகள் தொடங்கப்பட்டன.

இடையில் சினிமா ஸ்டிரைக் ஒரு மாதத்திற்கு மேல் சென்றுவிட்டதால் அப்போது படபிடிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் சூட்டிங்கை முடித்து, வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர்  திட்டமிட்டுள்ளனர்.  இதற்கிடையில், இந்த மாத இறுதியில் படத்தின் “முதல் லுக்” வெளியாகும் என்று கூறப்படுகிறது” என்றனர். இது போதுமே அஜித் ரசிகர்களுக்கு.

விஸ்வாசம் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்பட பலர் நடிகர்கள் நடிக்கின்றனர். இசை டி.இமான், சத்யஜோதி பிளிம்ஸ் தயாரிக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news