விஸ்வாசம், பேட்ட பொங்கலுக்கு அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் – கரிகாலா… உடம்ப இரும்பாக்கிகோடா அடமழை வெளுத்து வாங்கபோது

சென்னை: தல அஜித்தின் விஸ்வாசம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட ஆகிய இரண்டு படங்களும் வரும் பொங்கலுக்கு அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதற்கான புரோமோஷன்களில் ஈடுபட புல் போர்சுடன் தல, சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தாங்கள் ரசிக்கும் நடிகர்களின் படங்களை தியேட்டரில் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படமும், சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட” படமும் அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் ஆகிறது.

அதன்படி வரும் ஜன்வரி 10ம் தேதியான வியாழக்கிழமை அன்று விஸ்வாசம் படமும், 11ம் தேதி வெள்ளிக்கிழமை ரஜினியின் “பேட்ட” படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் பெரும் உற்சாக்த்தில் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அவர்கள் இப்போதே படத்துக்கான புரோமோஷன்களை டிவிட்டரில் தொடங்கி விட்டனர்.

விஸ்வாசம் படம் சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் உருவாகும் 4வது படம். இதில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் விவேக், தம்பி ராமய்யா, ரோபோ சங்கர், யோகி பாபு, கோவ சரளா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு வெற்றி, படத்தொகுப்பு ரூபன், இசை டி.இமான். சத்யஜோதி பிளிம்ஸ் தயாரிக்கிறது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

பேட்ட படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தி சூப்பர் ஸ்டார் முதல் முறையாக நடிக்கிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், பாலிவுட் நடிகர் நவாஸுத்தின் சித்திக், சிம்ரன், யோகி பாபு, பாபி சிம்ஹா, இயக்குனர் மகேந்திரன், மேகா ஆகாஷ், முண்டாசுபட்டி ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநீதிமாறன் தயாரிக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news