September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஸ்வரூபம் 2 திரைப்படம். விவரம் உள்ளே

நடிகர் கமலஹாசன் இயக்கத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் 2013ல் வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது விஸ்வரூபம் படமாகும். இந்த படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் வருவதை நடிகர் கமலஹாசன் உறுதிபடுத்தியிருந்தார். இந்த படத்திற்கு இஸ்லாமியர்களை கெட்டவர்களாக சித்தரித்த நடிகர் கமலஹாசனுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை கெட்டவர்களாக காண்பித்ததற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் விஸ்வரூபம் படத்தில் கெட்டவர்களாக சித்தறித்த கமல் மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தார். இந்நிலையில் விஸ்வரூபம்-2’ படம் முடிந்து இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த படம் வருகிறது. இதன் முதல்பாகம் பல எதிர்ப்புகளில் சிக்கி சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே வெளியானது. தற்போது ‘விஸ்வரூபம்-2’ படமும் தணிக்கை குழுவினரின் கெடுபிடியில் சிக்கி உள்ளது. தமிழில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு யூஏ சான்றிதழ் பெற்றது. இந்தி பதிப்பையும் தணிக்கை குழுவினர் பார்த்து பல காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். 17 சர்ச்சை காட்சிகளை நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு படக்குழுவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தணிக்கை குழுவினர் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தி பதிப்புக்கு யூஏ சான்றிதழ் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தயாரிப்பு தரப்பில் இன்னும் உறுதிபடுத்தவில்லை. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news