September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்சனை வந்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் – நடிகர் கமல்

நடிகர் கமல் ஹாசன் அரசியல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுவந்தாலும், தற்போது அவரது கவனம் மீண்டும் திரையின் பக்கம் வீழ்ந்திருக்கிறது. அதற்க்கு முழுமுதற் காரணம் விஸ்வரூபம் திரைப்படமாகும். கமலுக்குக் கடந்த 2015ல் வெளிவந்த தூங்காவனம்’ திரைப்படத்துக்குப் பின் எந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கவில்லை.

இன்னிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் நடிகர் கமல். முதல் பாகத்திற்கு எதிர்ப்புகள் வந்தது போல் மீண்டும் எதிர்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள் ? என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது : அந்த மாதிரி எதுவும் வராதுனு நினைக்கிறேன்.

முதலில் வந்த பிரச்னை வேற ஒரு பெயரில் உருவம் மாற்றி மாறுவேடத்தில் வந்த எதிர்ப்புகள் தான். அந்த எதிர்ப்பு பிற்பாடு அவர்களிடமிருந்து வரவில்லை. இப்போதும் அப்படித்தான். அது அரசியல். இதிலும் அரசியல் வந்தால், எதிர்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்திருக்கிறேன். அரசியல்ரீதியாக வரும் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு நான் தயாராக உள்ளேன். இது விஸ்வரூபம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டும் இருக்காது. முன்கதையும் இந்தப் படத்தில் இருக்கிறது. யார் இந்த விஸாம் அஹமது காஷ்மீரி என்பதை விளக்கும் கதையாகவும் இந்தப் படம் இருக்கிறது என முடித்தார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news