Inandoutcinema - Tamil cinema news

விஸ்வரூபம் 2 படத்திற்க்காக சல்மான் கானுடன் இணையும் நடிகர் கமல் ஹாசன். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2 அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லரும் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இந்தியில் விஸ்வரூப் 2 என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இதற்கான புரொமோஷன் பணிகளை ஆரம்பித்துவிட்டார் நடிகர் கமல்ஹாசன். சல்மான்கான் தொகுத்து வழங்கும் தஸ் கா தம் என்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருக்கிறார். திரையில் இருவரும் இணைந்து தோன்ற இருப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இந்தி வெர்ஷனை இயக்குநர் ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news