September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

தமிழகத்தில் பல நகரங்களில் விஸ்வரூபம் 2 வெளியாகவில்லை அதிர்ந்த படக்குழு – விவரம் உள்ளே

நடிகர் கமல் ஹாசன் தனது சொந்த தயரிப்பில் அவரே இயக்கி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் விஸ்வரூபம் 2 ஆகும். இந்த படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 வெளிவருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படம் மர்மயோகி சர்ச்சைகள் ஓய்ந்த பிறகு ஆகஸ்ட் 10ம் தேதி [ இன்று ] வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்னிலையில் விஸ்வருப்பம் 2 திரைப்படத்திற்கு புது சிக்கல் எழுந்துள்ளது. விஸ்வரூபம் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானாலும் தமிழகத்தில் சில நகரங்களில் வெளியாகவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதுவும் தமிழக்தின் முக்கிய நகரமான மதுரை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம் இன்று வெளியாகவில்லை. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே உடன்பாடு ஏற்படாததால் படம் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் வசூல் பெருமை அளவில் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட நகரங்களில் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகாததால் கமல் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news