விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தின் டீசர்..

எஃப்ஐஆர் படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெப்பா மோனிகா ஜான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக நடிகர் விஷ்ணு விஷால் தனது உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து மிரட்டியிருக்கிறார்

விஷ்ணு விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த போஸ்டரை இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட்டனர். படத்தின் 2 ஆவது போஸ்டர் ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. இதனை நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை 6.5 மணிக்கு வெளியானது. திரைத்துறையை சேர்ந்த நான்கு பிரபலங்களும் அவரவர் டிவிட்டர் பக்கங்களில் டீசரை வெளியிட்டனர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news