பாடகி சின்மயிக்கு முன்பு நான்தான் மேடையில் வெளிப்படையாக பேசிய அமலா பால் – காணொளி உள்ளே

வணிக வெற்றியையும், கூடுதலாக தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்ற பெயரையும் சம்பாதித்திருக்கிறது ராட்சசன் திரைபடம். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் விழாவில் விஷ்ணு விஷால். அமலா பால், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குனர் கோபி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பிவி சங்கர், சண்டைப்பயிற்சியாளர் விக்கி, ஸ்கைலார்க் ஸ்ரீதர், முண்டாசுப்பட்டி ராம்தாஸ் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய அமலா பாலிடம், மீடூ ஆஷ் டாக் பற்றி கேட்கபட்டது. அதற்கு அவர் கூறியதாவது : சமூக வலைதளங்கள் மூலம் நிகழும் Metoo மிக முக்கியமானது. இந்த Metoo ஆஷ் டாக் பற்றி முதலில் பேசியது நான்தான். எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன், அதைப்போல் எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும் என நடிகை அமலா பால் கூறியுள்ளார்.

பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் நடிகை அமலாபால் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news