September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news
sandakozhi 2 release date announced

கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள் – நடிகர் விஷால் வேண்டுகோள்

 சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துளார்.

இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றம் ஏற்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

தற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனை தருகிறது. இது தொடர்சியாக நடக்கிறது. இந்த சம்பவம் பெரிய செய்தியான பின்னரும் கூட எந்த அதிகாரியும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது அதைவிட வேதனை.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு நடிகர் விஷால் அதில் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news