இணையத்தில் கசிந்த விஷால் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் புகைப்படம்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விஷால். இவர் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்தநிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது.

அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இன்னிலையில் திருமணம் குறித்து நடிகர் விஷால் கூறியதாவது : எனக்கும் அனிஷாவுக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து காதல் வயப்பட்டோம். எங்கள் காதல் விவகாரம் நெருக்கமான சிலருக்கு தெரிந்து விட்டது.

இருவீட்டு பெற்றோர்களும் பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டியபிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் நடைபெறும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news