Inandoutcinema - Tamil cinema news

இந்திய அணிய சரிவில் இருந்து மீட்டு உலக சாதனை படைத்த விராட் கோலி – விவரம் உள்ளே

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் ஒருநாளில் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பிறகு விராட் கோலி களம் புகுந்தார். சிறிது நேரத்திலேயே தவானும் நடையை கட்ட ராயுதவுடன் ஜோடி சேர்ந்தார் கோலி.

நிதான ஆட்டத்தை கடைபிடித்த இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் அடித்து ஆடினார். அரை சதத்தை கடந்த ராயுடுவும் ஆட்டம் இழந்த பிறகு சிறிது இஅடைவேளிவிட்டு விக்கட்டுகள் விழதொடங்கியது. ஒரு புறம் விக்கட் வீழ்ந்தாலும் விராட் கோலி கடைசிவரை களத்தில் நின்று இந்திய அணி 300 ரன்களை கடக்க உதவினார்.

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 157 ரன்களுடனும் மொஹம்மது சமி ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தனர்.இந்த ஆட்டத்தில் 81 ரன்கள் எடுக்கையில் விராட் கோலி அதிவேகமாக 10000 ரன்களை கடந்தவர் பட்டியலில் முதலிடத்தில் வந்துள்ளார். இதற்க்கு முன்னதாக சச்சின் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news