Inandoutcinema - Tamil cinema news

விராட் கோலி, மந்தனா ஹர்மந்தபிரீத் கவுர் ஆகியோருக்கு கிடைத்த கௌரவம்

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடிய மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் உள்ள மெழுகு சிலையின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.சி.ஐ. விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து உள்ளது.

இதில், சீனியர் பிரிவில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான பாலி உம்ரிகர் விருதினை கேப்டன் விராட் கோலி பெறுகிறார். 2016 மற்றும் 2017, 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் சிறந்த சர்வதேச வீரர் என்ற வகையில் விராட் கோலியை இந்த விருதை பெற உள்ளார்.

பெங்களூருவில் வரும் செவ்வாய்க்கிழமை இந்த விருது வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது. மகளிர் பிரிவில், ஹர்மன் பிரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகிய இருவரும் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான பிரிவில் விருதை பெற உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news