Inandoutcinema - Tamil cinema news

அரை சாதனத்தை கடந்து, உலக சாதனையை நெருங்கும் விராட் கோலி – விவரம் உள்ளே

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி அதே உத்வேகத்துடன் ஒருநாளில் போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 81 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால், இன்றைய போட்டியில், புதிய மைல்கல்லை எட்டுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அனியின் கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பந்து வீசுமாறு அழைத்தார். இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பிறகு விராட் கோலி களம் புகுந்தார். ஒரு புறம் விராட் கோலி நிதானத்தை கடைபிடிக்க ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தார். 8 ஓவர் முடிவில் அணியின் ஸ்கொர் 39 ரன்களில் தவான் மட்டும் 29 எடுத்திருந்தார். அடுத்த ஓவரிலேயே எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார் .பின்னர் காலம் புகுந்த ராயுடு கோலியுடன் ஜோடி சேர்த்தார். நிதான ஆட்டத்தை கடைபிடித்த இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் அடித்து ஆடினார். இந்திய அணி 25 ஓவர் முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. பின் வரிசையில் தோணி மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இருப்பதால் இந்திய 3ஊ ரன்களை எளிதில் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news