Inandoutcinema - Tamil cinema news

விராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைய இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக, லண்டனில் இருந்து தில்லிக்கு வந்த அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் விராட் கோலியின் முகம் மற்றும் உருவ அமைப்பை முழுமையாக அளவெடுத்துள்ளனர். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news