இயக்குனர் பாலாவின் திரை வாழ்க்கையில் இதுதான் முதல் முறை – விக்ரம்

தெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் துருவ்வின் பிறந்த நாளான நேற்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இதற்கான விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா தனது படத்தின் ஹீரோ துருவ்வை அறிமுகப்படுத்தினார். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விக்ரம் கூறியதாவது : ஒரு அறிமுக நாயகனை வைத்து பாலா முதல்முறையாக இயக்குகிறார்.

முதல் ரெண்டு நாள் துருவ் நடிக்க நெர்வஸ் இருந்தான். அப்பறம் ஒரு நாள் பாலவே கால் பண்ணி துருவ் பார்க்குக்கு வந்துட்டான் அப்படினு சொன்னாரு. அது போதும் பாலா சொன்ன அதுக்கு மேல என்ன வேணும். நான் முழுமையா நம்புறேன், துருவ் எனக்கு போட்டியா வருவான். எனது மகனை பாலா அறிமுகம் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் விக்ரம் தெரிவித்தார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news