சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் கேப்டன் விஜயகாந்த் – விவரம் உள்ளே

நடிகர் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. திரை துறையில் கால்பதித்து முன்னணி நடிகராகவும் வளம் வந்தார். திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்தவர்களில் நடிகர் விஜயகாந்தும் ஒருவர் ஆகும்.

பின்னர், 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் தமிழக மக்களின் நலனுக்காக தொலைநோக்கு பார்வையுடன் அவர் பேசிய முழக்கங்கள் மற்றும் தே.மு.தி.க.வின் பொது கூட்டங்கள்,தேர்தல் பிரச்சாரங்கள், மாநாடுகள், நலத்திட்ட உதவிகள், எதிர் கட்சி தலைவராக இருந்து செய்த சாதனைகள், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நடத்திய போராட்டங்கள் போன்றவற்றின் கம்பிர பேச்சுகள், கேப்டனின் இடி முழக்கம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கேப்டன் டிவியில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தினமும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இடியோசைகளை மிஞ்சும் கேப்டனின் முழக்கங்கள் மறுஒளிபரப்பாக தினமும் காலை 7.30 மணிக்கு கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news