September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் விஜயகாந்த் மற்றும் சண்முக பாண்டியன் புகைப்படம்.

தே.மு.தி.க பொதுச் செயலாளரான விஜயகாந்தின் இளைய மகன்தான் சண்முகபாண்டியன் ஆகும். இவர், சகாப்தம் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட`மதுரவீரன்’ என்ற படத்தில் நடித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளி போனது. இந்நிலையில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதற்காக, லண்டன் சென்ற சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் `டெரர் கண்களை’ தன் இடது கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார். இதை விஜயகாந்தின் 40 வருட திரை பயணத்தை கௌரவிக்கும் விதமாக நடந்த பாராட்டு விழாவில் ஒரு காணொளி வெளியிட்டு பச்சை குத்தியிருப்பதை காண்பித்தார். தற்போது இந்தியா திரும்பிய சண்முக பாண்டியன் பச்சை குத்தியதை நேரில் காண்பித்தார்.

அதை தனது இணையதள பக்கத்தில் விஜயகாந்த் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது : தமிழன்என்றுசொல் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற எனது இளைய மகன் சண்முகபாண்டியன், இன்று சென்னை வந்தடைந்தார். தன் கையில் எனது கண்களை பச்சைகுத்தியதை (tatoo) காட்டி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜயகாந்த் பதிவிட்டுள்ளார் .

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news