September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

தளபதி 63 படத்தின் இயக்குனர் மோகன் ராஜாவா ? விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக அடிபடுகிறது. தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து, விஜய் தன் அடுத்த படத்தையும் அட்லிக்குத்தான் தருவார் என பலரும் எதிர்பார்த்தனர். அதேபோல அட்லியும் ஸ்கிரிப்ட் வேலைகளில் பரபரப்பாக இருந்தார்.

ஆனால், அவர் கதை சொன்னது ரஜினிக்கு. அட்லி சொன்ன ஸ்கிரிப்டை கேட்ட ரஜினி, ‘போனில் தகவல் சொல்றேன் என் கூறி அவரை வழியனுப்பிவைத்தார். ஆனால், கார்த்திக் சுப்புராஜை தேர்வுசெய்தார் நடிகர் ரஜினி. பிறகு விஜய்யை இயக்கும் முயற்சியில் இறங்கினார் அட்லி. விஜய் தன் அடுத்த படத்துக்கு ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதை அறிந்த அட்லி, விஜய்யின் அனுமதியுடன் ஏ.ஜி.எஸ்ஸுக்கு கதை சொன்னார். அவர் சொன்ன கதையை கேட்ட ஏ.ஜி.எஸ் நிறுவனம், ‘விஜய்யுடன் கலந்துபேசுகிறோம். அவர் ஓ.கே சொன்னால் நீங்கள்தான் டைரக்டர். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னை இல்லை’ என்று அட்லியை அனுப்பிவைத்தனர். இதற்கு முன்னதாக இயக்குநர் மோகன் ராஜாவும் விஜய்க்கு கதை சொல்லியிருந்தார். இதற்கு முன் மோகன் ராஜா விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படத்தை இயக்கியவர். மேலும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்காக ‘தனி ஒருவன்’ என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தைத் தந்தவர். அவரை ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு கதை சொல்ல அனுப்பினார் விஜய். இந்த இரு இயக்குநர்கள் உள்பட வேறு சிலரும் கதைகளுடன் மோதியதால், ‘இயக்குநர் யார் என்று முடிவெடுக்கும் பொறுப்பை விஜய்யிடமே விட்டது ஏ.ஜி-எஸ் நிறுவனம். விஜய்யும் பல விஷயங்களை யோசித்து, தன் அடுத்த பட இயக்குநராக மோகன் ராஜாவை தேர்வு செய்துள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விரைவிளித்து பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news