விஜய் சேதுபதிக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தனியார் தொலைக்காட்சி – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி ஆகும். கதாநாயகனாக நாயகனாக கால்பதித்து முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய்சேதுபதி, தனது 25-வது படமான சீதக்காதி படத்தை நடித்துமுடித்து விட்டார். அதே நேரத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் தன் படங்களின் வாயிலாக நிலைநிறுத்திவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.

சீதக்காதி படத்தில் முற்றிலும் மாறுபட்ட மூத்த நாடகக் கலைஞராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி, ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக மக்கள் செல்வன் 25 என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டு அதற்கான பணிகளை நடத்தி முடித்திருக்கிறது விஜய் டிவி.

இந்நிகழ்ச்சியில் விஜய்சேதுபதிக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வது நடிகர் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் நிகழ்ச்சிக் குழுவினர் பார்த்துக்கொண்டுள்ளனர்.

பின்னர் நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துகொண்டனர். நிகழ்ச்சியில் இருவரும் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

இதனால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இன்று மாலை சீதக்காதி படத்தின் இரண்டாவது புகைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news