விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் டீசர் வெளியிட்டு தேதி அறிவிப்பு -விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான்.

துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்தப் படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தின் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மிகவும் எதிர்பார்த்த விஜய் மற்றும் ரஹ்மான் ரசிகர்களுக்கு சிம்டாங்காரன் பாடல் சற்று ஏமாற்றத்தை தருவதாக சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாடலசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடல் வரிகள்தான் புரியவில்லை என்றால், ஏ.ஆர்.ரகுமானின் இசையும் பெரிய அளவில் இல்லை என பாடல் கேட்ட அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி போன்ற பாடல்கள் சர்ச்சையை கிளப்பியது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் இந்த படத்தின் டீசர் அக்டோபர் 19-ம் தேதி வெளிவருமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news