விஜய் மகன் நடிக்கும் ஜங்சன் படத்தின் டீஸர் வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் நடிகர் விஜயின் மகன் நடிப்பில் உருவான ஜங்சன் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அவரது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார். இன்னிலையில் விஜயின் மகனான சஞ்சய் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.

ஜங்ஷன் என்ற பெயரில் வெளியாகியுள்ள அந்தக் குறும்படத்தில் ஒரு சில விநாடிகள் மட்டுமே திரையில் வருகிறார். இந்தக் குறும்பட டீசரை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இன்று சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதை கொண்டாடி முடிப்பதற்குள், சர்கார் பட சிங்கிள் ட்ராக் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது விஜய் மகன் குறித்த செய்தியும் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news