இணையத்தில் வைரலாக பரவும் சீதக்காதி படத்தின் இரண்டாவது புகைப்படம் வெளியீடு – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி ஆகும். கதாநாயகனாக நாயகனாக கால்பதித்து முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய்சேதுபதி, தனது 25-வது படமான சீதக்காதி படத்தை நடித்துமுடித்து விட்டார். அதே நேரத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் தன் படங்களின் வாயிலாக நிலைநிறுத்திவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.

சீதக்காதி படத்தில் முற்றிலும் மாறுபட்ட மூத்த நாடகக் கலைஞராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இந்த வருடம் 2016ம் ஆண்டை போல் பல படங்கள் வெளியாகும் ஒரு அற்புதமான ஆண்டு என கூறலாம். குறிப்பாக சேக்க சிவந்தா வானம் மற்றும் 96 போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனது அடுத்த படத்தின் வெளியிட்டு வேளைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட புகழ் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்தான் சீதக்காதி ஆகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த அய்யா கதாபாத்திரத்தின் தோற்றம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. அந்த புகைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சீதக்காதி திரைப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது தோற்றம் இந்த மாலை வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news