September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

சிம்பு வற்புறுத்தியதால், வேண்டா வெறுப்பாக விஜய் சேதுபதி செய்த காரியம். விவரம் உள்ளே

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார்.

இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, ஜுங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், செக்கச் சிவந்த வானம் சீதக்காதி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] .

இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னிலையில் ஜுங்கா பட புரொமோஷக்காக விஜய் சேதுபதி பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இணையத்தில் வைரலான, சிம்பு விஜய் சேதுபதிக்கு ஊட்டிவிடும் புகைப்படத்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : எனக்கு சாப்பாடு வேண்டாம், புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றேன். ஆனால் சிம்பு கட்டாயப்படுத்தி ஊட்டியதோடு அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news