விஜய் சேதுபதி வெளியிட்ட சேரன் படத்தின் தலைப்பு – விவரம் உள்ளே

பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சேரன், தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது இயக்கத்தில் உருவாகிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். பிரிவோம் சந்திப்போம், ஆடும் கூத்து, ராமன் தேசிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல் என பிற இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார். இதைத் தொடர்ந்து சர்வானந்த், நித்யா மேனன் நடிப்பில் 2015-ம் ஆண்டு ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார். அப்படத்தை வெளியிட பெரும் சிரமம் ஏற்பட்டதால், C2H (Cinema 2 Home) என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் திரையரங்குகளில் படத்தை வெளியிடாமல் சி.டி. மூலம் படத்தை வெளியிட்டார். அதற்குப் பிறகு படம் இயக்காமலே இருந்துவந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சேரன் படம் இயக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், அது குறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் சேரன் இயக்கும் புதிய படத்தை பற்றிய தகவல் இன்று காலை வெளியாகும் என கூரப்பட்டிருந்தது. அதன்படி சேரன் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். திருமணம் சில திருத்தங்களுடன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கிறார். காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகம் ஆகிறார். சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் சேரனும் இப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news