அவர் போல கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும்-நானி…

விஜய்சேதுபதியை பொறுத்தவரை முன்னணி ஹீரோவாக நடித்து வந்தாலும் கதாநாயகன் என்கிற வட்டத்துக்குள் மட்டுமே சிக்கிக்கொள்ள விரும்பாமல் வில்லன், குணச்சித்திரம், சில நேரங்களில் கெஸ்ட் ரோல் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்தார். இன்னொரு பக்கம் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் சைரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் நானி, நடிகர் என்றால் விஜய்சேதுபதி போல இருக்கவேண்டும் என அவரை புகழ்ந்துள்ளார்.. தற்போது தான் நடித்துள்ள கேங் லீடர் என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நானியிடம் விதவிதமான கதாபாத்திரங்களை நீங்கள் தேர்வு செய்வதற்கு என்ன காரணம் என கேட்டபோது, விஜய்சேதுபதியை குறிப்பிட்டு, திறமையை வெளிப்படுத்தும் விதமாக அவர் போல எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்று புகழ்ந்து கூறியுள்ளார் நானி.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news