September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

கீர்த்தி சுரேஷ் பாணியை பின்பற்றும் விஜய் சேதுபதி பட நடிகை – விவரம் உள்ளே

Keerthi Suresh Latest stills

கதைக்கு தேவையாக இருந்தாலும் முத்த காட்சிகளில் நடிக்க சம்மதிக்க மாட்டேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அதனால் பல பட வாய்ப்புகளை தான் இழந்ததாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது அதே போல் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார்.

இவர் காதலும் கடந்து போகும், கவண், ஜூங்கா ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளவர் நடிகை மடோனா செபாஸ்டியன் ஆகும். மேலும் விஜய் சேதுபதியும் மடோனா செபாஸ்டியன் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபத்திய பேட்டியில் சினிமாவில் உங்களுக்கென்று சில கொள்கைகள் வைத்திருக்கிறீர்களாமே ? என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : ஆமாம் ஆபாசமாக நடிக்கமாட்டேன்.

முகம் சுழிக்கும் காட்சிகளில் எப்போதுமே நடிக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கும் குடும்பம் இருக்கிறது, தங்கை இருக்கிறாள். அவளோடு நேரம் செலவழிப்பதே என் முதல் பொழுதுபோக்கு. முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் பட வாய்ப்புகளையும் இழந்திருக்கிறேன்.

முதன் முறையாக சினிமாவில் கட்டிப்பிடிக்கும் காட்சியில் நடித்தபோது அம்மாவுக்கு போன் பண்ணி அழுதேன். மற்றவர்களிடம் பேசவே பயப்படுவேன். அந்தளவுக்கு எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எந்த மொழிப் படமாக இருந்தாலும் நடிப்பேன். மற்றபடி கனவு கதாபாத்திரம் என்றெல்லாம் எதுவுமே இல்லை.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news