Inandoutcinema - Tamil cinema news

கார்த்தி படத்தை பின்னுக்கு தள்ளி இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி படத்தின் டீசெர்.

கோகுல்,இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார் இயக்குனர் கோகுல். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 96 ஆகும். இப்படதின் முன்னோட்ட காணொளி நேற்று மாலை வெளியிடப்பட்டது. வெளியானது முதல் இந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த காணொளியை தற்போது வரை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ட்ரெண்டிங்கில் தற்போது வரை முதலிடத்தில் வளம் வருகிறது. கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் உருவாக்க காணொளி 2ம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news