September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஜுங்கா பட நடிகை சயீஷாவிற்கு குவியும் பாராட்டுக்கள். விவரம் உள்ளே

ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து எடுத்திருக்கும் படம், `ஜுங்கா’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒரே மாதிரியான உடையணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். ற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த இசை வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது விழா மேடையில் பேசிய இயக்குனர் கூறியதாவது : ஜூங்கா படப்பிடிப்பை குளிர்பிரதேசத்தில் நடத்தினோம். மைனஸ் 9 டிகிரியில் படப்பிடிப்பு நடந்தபோது சாயிஷா மெல்லிய உடை அணிந்து இருந்தார்.

அவரால் குளிரை தாங்க முடியவில்லை. மயக்கமானார். உடனே அவரை காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். எனக்கு படப்பிடிப்பு நின்று விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டது. கார் சிறிது தூரம் சென்றதும் நின்றது. பின்னர் அது திரும்பி படப்பிடிப்பு நடந்த இடத்துக்கே வந்தது. காரில் இருந்து மயக்கம் தெளிந்து இறங்கி வந்த சாயிஷா என்னால் படப்பிடிப்பு பாதிக்க கூடாது. சிறிது நேரம் ஹீட்டர் அருகில் நின்று நடித்து முடித்துவிட்டு கிளம்புகிறேன் என்றார். அவரது அர்ப்பணிப்பை பார்த்து மகிழ்ந்தோம். அவருக்கு நன்றி என இயக்குனர் கோகுல் கூறினார். நடிகை சயீஷாவின் இந்த அர்ப்பணிப்பை திரை பிரபலங்கள் உட்பட பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news