September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

கன்னட திரையுலகில் கால் பதிக்கும் நடிகர் விஜய் சேதுபதி. விவரம்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, ஜுங்கா, 96, சூப்பர் டீலக்ஸ், செக்கச் சிவந்த வானம் சீதக்காதி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

மேலும், தெலுங்கில் அதிகப்படியான பொருள்செலவில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சனுடன் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி வெளிவந்துள்ளது. தற்போது சிவ கணேஷ் இயக்கும் அக்கடா என்னும் கன்னடப் படத்தில் வசந்த் விஷ்ணு என்பவருக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார் என தகவல் வந்துள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news