September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜயின் சர்க்கார் திரைப்படம். விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.

இதில் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இன்னிலையில், நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் புகைபிடிக்கும் நடிகர் விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த எச்சரிக்கை நோட்டீஸை அனுப்பியுள்ளது.

புகைபழக்கத்தை இளைஞர்களிடமிருந்து அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டுவரும் முதல்கட்ட முயற்சிக்கு திரையுலகினர் ஒத்துழைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. நடிகர் விஜயின் படத்திற்கு அடிக்கடி ஏதேனும் சர்ச்சைகள் எழுவதால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news