Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் நோட்டா படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே

தெலுங்கில் அறிமுகமாகி சில படங்களில் நடித்திருந்தாலும் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா வட்டாரம் முழுக்க பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா ஆகும். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படமும் மாபெரும் ஹிட்டடித்துள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்திற்குப் பிறகு இவருக்கு இருந்த ரசிகர்கள் எண்ணிக்கை, கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இருமடங்கானது. குறிப்பாக இளம் பெண்கள் பெரும்பாலானோரை ஈர்த்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

இதுவரை காதல் படங்களில் நடித்த இவர் தற்போது அரசியல் படமான நோட்டாவில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார் விஜய் தேவரகொண்டா. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை, அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர், இந்த படத்தை இயக்குகிறார்.

சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார். மேலும் சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுள்ளனர். இன்னிலையில் இதன் முன்னோட்டம் [ இன்று 4 மணிக்கு ] வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படம் தயாராகி வரும் அரசியல் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news