சக்சஸ் பார்ட்டியையும் சர்ச்சை ஆக்காமல் விடமாட்டார் போல இருக்கே முருகதாஸ்!

சென்னை: தமிழக அரசியலை மையமாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த திபாவளிக்கு சர்கார் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை தீயில் போட்டு எரிப்பது போன்றும், இந்த திட்டமே ஒரு ஏமாற்று வேலை என்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் அவேசத்தில் தங்கள் வீடுகளில் இருந்த அரசு இலவச மிக்சி கிரைண்டர்களை தீயிட்டு கொளுத்துவது போல சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவிட்டனர். ஆனால், இதையெல்லாம் ஆளும் கட்சி தரப்பினரே செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

இது ஒருபுறம் இருக்க, ஆளும் கட்சியை சேர்ந்த அதிமுகவினர் சர்கார் படத்தில் வரும் சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்ககோரி கடந்த வாரம் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டு இருந்த நடிகர் விஜயின் கட் அவுட்கள் உடைத்து அகற்றப்பட்டன.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குகள் கூட தொடரப்பட்டன. இப்பிரச்னை கடந்த வாரம் பெரும் விவாத பொருளாக மாறி பெரும் பர்பரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, படத்தில் இருந்த அந்த காட்சிகள் மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டு நீக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த தீபாவளிக்கு உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன சர்கார் படம் 6 நாட்களில் இதுவரை  150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக நேற்று சர்காஸ் சக்சஸ் பார்டி கொண்டாடப்பட்டது. இதில், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான், நடிகளைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் விசேஷம் என்னவென்றால் எந்த மிக்சி, கிரைண்டர்கள் குறித்து சர்சை எழுந்ததே அதேபோன்று ஒரு கேக் தயாரிக்கப்பட்டு அதை வெட்டி சர்கார் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

இந்த புகைபடங்கள் தற்போது தளபதி ரசிகர்கள் இணையத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். – ஒன்னும் சொல்றதுக்கு இல்ல யுவர் ஆனர்!

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news