Inandoutcinema - Tamil cinema news

மீடூ சர்ச்சையில் சிக்காத அளவுக்கு ரோமேன்ஸ் பண்ண போறேன் – விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுக்க வெளியிடும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது : தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார்.

கடந்த இரண்டு படங்கள் வியாபரா ரீதியாக சரியாக போகவில்லை. படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இயக்குனருக்காக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன்.

நான் சாத்தியமாதான் சொல்றேன். பொதுவாக நான் எந்த பிரச்சனைக்கும் போவதில்லை. அதே நேரத்தில் வந்த பிரச்னையை விடமாட்டேன். அது வேற விஷயம் என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news