September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

சூர்யா விஜய் திரைப்படம் தீபாவளி போட்டியில் இருந்து தள்ளிபோகிறதா ? விவரம் உள்ளே

ngk vs sarkar

விஜய் நடிப்பில் சர்கார், அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் NGK ஆகிய படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகின. நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். ஆனால் இந்த படத்துடன் போட்டி போடுவதாக அறிவித்த தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நடிங்கர் சூர்யாவின் என்ஜிகே படம் தள்ளி போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ngk vs sarkar

படப்பிடிப்புகள் முடியாத காரணத்தால் அஜத்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு தள்ளி போனது. இதனையடுத்து சூர்யாவின் NGK படமும் செல்வராகவனின் உடல்நல குறைவால் தள்ளி போவதாக செய்திகள் உலா வர தொடங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த படம் சொன்னபடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்பது போல NGK தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்வீட் செய்துள்ளார்.

ngk vs sarkar

இதனால் சர்கார் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. விஜய் அஜித்தை போலவே நடிகர் சூர்யாவிற்கு மாபெரும் ரசிகர் வட்டாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏதேனும் ஒரு படம் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news