விஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு

நேற்று தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் பசுமை வழி சாலைக்கு திட்ட அளவீடு பணி நடைபெற்று வந்தது. அப்போது சந்திரகுமார் என்பவரது விவசாய நிலத்தில் அளவீடு செய்வதற்கு போலீசாருடன் வருவாய்த்துறையினர் சென்றனர். இதையறிந்த சந்திரகுமார் தனக்கு சொந்தமான நிலத்தில் அளவீடு செய்தால், உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, குடும்பத்தினருடன் ‘தீக்குளிப்பேன்’ என எச்சரிக்கை விடுத்தார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த மனோகரன், வேலவன் உள்ளிட்ட 14 பேர் கைகளில் மண்எண்ணெய், பெட்ரோல் கேன்களுடன் நின்று தங்கள் நிலத்தை அளவீடு செய்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் நிலத்தை அளவீடு செய்தனர். அதிகாரமற்ற விவசாய குடும்பங்கள் கதறி அழத்தொடங்கினார்கள். அந்த காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

நேற்று இந்த படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில்

 

தமிழகத்திற்கு தேவையா 8 வழி பசுமை சாலை

அழியப்போகிறது தமிழகத்தின் அழகிய பூஞ்சோலை

நாளிதழில் வரும் செய்தியோ விவசயிகள் தற்கொலை

தமிழா விழித்துக்கொள் இது திட்டமிட்ட படுகொலை

 

என்று எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. மேலும் தான் ஒரு முன்னாள் விவசாயின் மகன் என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளார். இதன் மூலம் கார்ப்பரேட்களின் சூழ்ச்சியால் இவரது தந்தை விவசாயத்தை விட்டது தெளிவாக தெரிகிறது. மேலும் முன்னணி நடிகர்களையும் அவரது படங்களையும் இணையத்தில் பேசும் தமிழ் சமூகம் விவசாயிகளின் பிரச்சனைகளை முன்னிறுத்த மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளர். விஜயின் சர்க்கார் படத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலான அதே நாளில் 14 பேர் விவசாய நிலங்களை காக்க தீக்குளிக்க முற்பட்டுள்ளார். இதை பற்றி எந்த ஊடகமும் பேசாதது வருத்தமளிப்பதாக உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு விவசாயிகளின் கண்ணீர் பரிசு. விரைவில் எங்கள் ரத்தமும் என கூறியுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news