September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்து ரசித்த துணை ஜனாதிபதி. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் இப்படத்தின் தெலுங்கு பிரதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பார்த்து ரசித்துள்ளார். இந்த படத்தை பற்றி வெங்கைய்யா நாயுடு கூறியதாவது : சமீபத்தில் வெளியான சின்னபாபு படத்தை பார்த்தேன்.

கிராமத்துப் பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரஸ்யமான நல்ல படம் என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய தாங்கள், எங்களின் படைப்பான `கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தைப் பார்த்து மனம்திறந்து பாராட்டியது எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் தங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள் என கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news