சஸ்பென்ஸ் த்ரில்லர்-வரலக்ஷ்மி நடிக்கும் “வெல்வெட் நகரம்” ட்ரைலர்…

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாவே கதாநாயகிகள் ஹீரோவுக்கு நிகராக சவாலான கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றிகளை கொடுத்து வருகின்றனர். முக்கியமாக நயன்தாரா, திரிஷா, சாய் பல்லவி போன்ற நடிகைகளை தொடர்ந்து தற்போது மக்கள் செல்வி வரலட்சுமியும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் “வெல்வெட் நகரம்” என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக வரலக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் நடிகை கஸ்தூரி இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார். இவர்களுடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் 8வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கிறார். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, அருவி படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்கிறார். அச்சு ராஜாமணி  இசையமைத்துள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த ட்ரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news