வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம் – புகைப்படம் உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். வந்தா ராஜாவாதான் வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், அத்திரண்டிகி தாரேடி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் மகத் மற்றும் கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசர், மற்றும் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லருக்காக சிம்பு டப்பிங் செய்துள்ளார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் நிலையில் பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு பணி தற்போது மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news