நடிகர் விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி சரத்குமார் !?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யும், பாக்கியராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கரதாஸ்’ அணியும் களம் இறங்குகிறார்கள்.

விஷால் தனது பாண்டவர் அணியை ப்ரொமோட் செய்யும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்க்கு கண்டம் கூறும்வகையில் , சரத் குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியிடமிருந்து விஷாலுக்கு எதிரான கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதில், “விஷால், உன்னுடைய சமீபத்திய வீடியோ என்னை வருத்தமடையச் செய்திருக்கிறது. நான் உன் மேல் வைத்திருந்த மரியாதையை நீயே கெடுத்துக் கொண்டுள்ளாய். ஒரு மனிதனின் தவறு நிரூபிக்கப்படும் வரை இன்னசெண்டாகத் தான் இருப்பான் என அந்த சட்டம் தான் சொல்கிறது. ஒருவேளை என் தந்தை தவறு செய்திருந்தால் இந்நேரம் அவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏதேனும் வகுப்புகளுக்கு சென்று, கொஞ்சம் வளர்வாயாக. எங்கள் அனைவருக்கும் உனது ரெட்டை வேடமும், பொய்களும் நன்கு தெரியும். ஒரு வேளை நீ புனிதனாக இருந்தால், உன்னுடைய பாண்டவர் அணியை சேர்ந்தவர் ஏன் பிரிந்து சென்று, உன்னை தோற்கடிக்க வேறொரு அணியை உருவாக்க வேண்டும்?

குறைந்தபட்சம் நீ திரைக்குப் பின்னால், சிறந்த நடிகனாக இருப்பதாக நான் நினைக்கிறேன். நீ சொல்வதைப் போல், “உண்மை வெல்லும்” என நானும் நம்புகிறேன், இவ்வாறு வரலக்ஷ்மி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news