சின்மயி அளித்துள்ள பாலியல் புகாருக்கு வைரமுத்து அளித்துள்ள பதில் – விவரம் உள்ளே

திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலன்களான நடிகர் தனுஷ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் சிக்கியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என ஒருசில பெண்கள் இந்த #MeToo ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்தனர். இதனை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதவிர சின்மயியும்,வைரமுத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தார். இதற்கு வைரமுத்துவிற்கு ஆதரவாகவும் சிலர் எதிர்ப்பாகவும், சமூக வலைதளத்தில் கருத்து பதிவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கவிஞர் வைரமுத்து தற்போது பதிலளித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறித்தாவது : அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது.

அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும் என கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news