‘தெய்வமகள்’ஹீரோயினின் புதிய படம் -சந்தோஷத்தில் ரசிகர்கள்

பிரபல சின்னத்திரை நடிகை வானி போஜன், நடிகர் வைபவ்வுக்கு ஜோடியாக ஒரு புது படத்தில் நடிகையுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த ‘தெய்வமகள் ‘ தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தவர் நடிகை வானி போஜன்.இந்த சீரியலுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.நடிகை வானி போஜன் இந்த ஒரே சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.இவர் இந்த சீரியல் முடிந்த பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார்.

தற்போது இவருக்கு ‘மேயாத மான் ‘படத்தின் ஹீரோ வைபவ்வுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை நிதின் சத்யா தயாரிக்கவுள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் மிமீ கோபி மற்றும் பூர்ணா நடிக்கவுள்ளனர்.

இந்த திரைப்படத்தை பற்றி நடிகர் நிதின் சத்யா கூறியது,’ இந்த திரைப்படம் ஒரு ‘கிரிம் திரில்லர்’ படமாக இருக்கும்.இந்த திரைப்படத்தின் கதை மையம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news