வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தை பற்றிய ரசிகர்கள் கருத்து – காணொளி உள்ளே

ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யாராஜேஷ், சமூத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளப்படம் வடசென்னை. வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

கடலோர பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களை சுற்றி நடக்கும் அரசியலையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். முதல் பாகத்தை இப்போது திரைக்கு கொண்டு வருகிறார்கள். தனுஷ் வாயில் கத்தியை கவ்வியபடி இருக்கும் புகைப்படம் ஒன்று ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

வடசென்னை படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த அந்த குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த காட்சிகளை வெட்டி நீக்கினார்கள். சில வசனங்கள் ஆபாசமாக இருப்பதாக கூறி அவற்றை கேட்காதபடி செய்தனர். குறிப்பாக மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பற்றிய சர்ச்சை காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கி உள்ளனர்.

இதுபோல் தி.மு.க பற்றிய சர்ச்சை வசனத்தையும் நீக்கி விட்டு படத்துக்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று வெளியான இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்து வந்த ரசிகர்கள் கருத்து வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த காணொளி மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news