விஜய் படத்தை மட்டும் கொண்டாடுகிறார்கள் என குமுறிய பிரபல இயக்குனர்

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஒடியான். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இன்னிலையில் படத்தின் இயக்குனர் இந்த விமர்சனம் குறித்து நடிகர் விஜய் படத்தையும் மோகன் லால் படத்தையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒடியான் பட நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய படத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார், பேசியதாவது : மலையாள படங்கள் இவ்வளவு வசூல் செய்தது என்று கூறி கொண்டாடாமல், அதற்க்கு நேர்மாறாக விமர்சிக்கிறார்கள்.

ஆனால் விஜய் படத்துக்கு இவ்வளவு வசூல் என்றால் மட்டும் விமர்சிப்பதை தவிர்த்து கொண்டாடுகிறார்கள். இதை ஒருவிதமான மனநோய் என்றுதான் கூறுவேன் என அறிமுக இயக்குநர் ஸ்ரீகுமார் கூறியுள்ளார். இயக்குநரின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒடியான் படத்தை விளம்பரப்படுத்தவே இயக்குநர் ஸ்ரீ குமார் விஜயை விமர்சிக்கிறார் என்றும சில விஜய் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news