September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிரபல தமிழ் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை: சின்னத்திரையில் அதிர்ச்சி

inandoutcinema

சென்னை: சென்னையில் சீரியல் நடிகை பிரியங்கா இன்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் வம்சம் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா (32). இவர் கணவர் அருண் பாலா கூடைப்பந்து பயிற்சியாளராக உள்ளார். இவர்கள் வீடு சென்னை வளசரவாக்கம் சிவன் தெருவில் உள்ளது.

இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் வழக்கம் போல வேலைக்கு சென்றபோது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் தகவல் அறிந்து வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடம் சென்று பிரியங்கா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது: நடிகை பிரியங்கா சீரியலில் பிசியாக நடித்து வந்துள்ளார். ப்ரியங்காவுக்கும் அருண் பாலாவுக்கும் திருமணமாகி3 ஆண்டுகள் ஆகிறது. அனால் இதுவரை அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் குடும்பாத்தாருடன் ஏற்பட்ட பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவுக்கு செய்து குடும்ப பிரச்னை காரணமாக பிரியங்கா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சின்னத்திரை நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொலைக்காட்சி நடிகர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை வேறுபடுத்தி உள்ளது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news