September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

டிவிட்டர்லையே இல்லாத ஈரானை திட்டி பதிவிட்ட டிரம்ப் – அவரையே கலாய்த்த இந்திய நடிகர்

சென்னை: இன்றைய இன்டெர்நெட் உலகத்தில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிறப்பட்டு வருகின்றன. யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்டும் உரிமையை, சமூக வலைத்தளங்கள் வழங்கியுள்ளது, பொது மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதனால் சில சுவாரசியங்களும் அவ்வபோது நடக்கும்.

இதில், நேற்று அமெரிக்க அதிபரை, நம்ம ஊர் நடிகர் ஒருவர் கலாய்த்துள்ளார். இது தற்போது டிவிட்டரில் டிர்ண்டாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். இதனாலேயே, அந்நாட்டில் இவரை எதிர்ப்பவர்களும், டிரம்பின் கருத்தை ரவுண்டு கட்டி கலாய்ப்பர்வர்களும் அதிகம். இந்தியாவிலும் அதிபர் டிரம்பின் கருத்தை கலாய்ப்பவர்கள் உண்டு.

இதற்கிடையில், ஈரான் நாட்டுக்கும் அமெரிக்க அதிபர் டிரப்புக்கும் அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அதிபர் டிரம்ப்,  ஈரான் அதிபர் ரவுஹானியை டிவிட்டரில் கடுமையாக எச்சரித்து ஒரு டிவிட் பதிவிட்டிருந்தார். அதில், “அமெரிக்காவை மிரட்டுவதை நிறுத்திகொள்ளுங்கள். இல்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று” கொட்டை எழுத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதில் நடிகர் சித்தார்த், அதிபர் டிரம்பின் பதிவை ஷேர் செய்து “caps lock” பட்டன் ஆன்னில் உள்ளது டா என்று பதிவிட்டிருந்தார்.

சித்தார்த்தின் பதிவுக்கு அவரது ரசிகர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது ஈரான் நாட்டில் டிவிட்டர் பயன்பாட்டில் இல்லை. ஆனால் அதுபற்றி தெரிந்தோ, தெரியாமலோ டிரம்ப் டிவிட்டரில் ஈரான் அதிபரை எச்சரித்து பதிவிட்டிருப்பது கேலியாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news