Inandoutcinema - Tamil cinema news

8 மணிலாம் முடியாது காலைல 4 மணிக்கே ஸ்டார்ட் பன்னனும் – தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க எடப்பாடி & கோ உச்ச நீதிமன்றத்தில் மனு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் “தமிழக மக்களின் நலனுக்காக” என்று எந்த அரசு திட்டத்தை அறிவித்தாலும் அதை பார்த்து மக்கள் குபீர் என்று சிரித்து விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்று கூறிவிட்டு புதிய டாஸ்மாக் கடைகளை திறப்பது, காட்டை அழித்து  பசுமை வழிச்சாலை அமைப்பது போன்று பல திட்டங்கள் உள்ளன.

அந்த வகையில் மற்றொரு பகீரை தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளிப்பண்டியை வருகிறது. இதற்கிடையில் எல்லா வருடமும் போல இந்த ஆண்டும் தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது. இதற்கிடையில், தமிழ்க அரசு உச்ச நீதிமன்றத்தில் தீபாவளி அன்று பொதுமக்கள் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பட்டாசு வெடிக்க 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றி, காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசுவெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இரவில் 2 மணி நேரம் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்தால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுப்படும் என்று அந்த மனுவில் தமிழக அரசு சுட்டிக்காடி உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அப்படின்னா தீபாவளி அன்னைக்கி அதிகாலைல 4 மணிக்கே சூரியன் வந்துடுமா யுவர் ஆனர்?

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news